உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுஷ்டிப்பு!

Thursday, May 31st, 2018

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு உலக சுகாதார ஒழுங்கமைப்பு அங்கத்துவ நாடுகளால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த வருடத்துக்கான புகையிலை எதிர்ப்பு நாள் புகையிலை பாவனையில் இருந்து இதயத்தை பாதுகாக்க, இதயபூர்வமாக செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

புகையிலை உற்பத்திப் பொருட்களை பாவிப்பதன் மூலம், மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாகவும்  வருடாந்தம் உலகம் முழுவுதும் 7 மில்லியன் பேர் மரணிக்கின்றனர் எனவும் உலக சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. 2030ம் ஆண்டில் இந்த மரண வீதம் 8 மில்லியனாக அதிகரிக்கவுள்ளது.

நாட்டில் மதுபானம் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் 15 ஆயிரம் பேர் மரணிப்பதுடன் இந்த பாவனையால் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, வருடாந்தம் 7500கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

அத்துடன் நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 17 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரையில் புகையிலை உற்பத்தி பொருட்களை பயன்படுத்துகின்றனர். புகையிலை பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதனால் இடம்பெறும் மரணங்களை குறைத்துக் கொள்ள இந்த நாளின் அனுஷ்டிப்பு மூலம்எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: