யாழ். நீதவான் நீதிமன்றத்தில் உரிமை கோரப்படாத நிலையில் சான்றுப் பொருட்கள்!
Saturday, June 25th, 2016
யாழ்ப்பாணம், கோப்பாய்ப் பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள பல சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளன. நீலநிற முச்சக்கரவண்டி, மோட்டார்ச் சைக்கிள், கோப்பாய்ப் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட பெண்களுக்கான சிவப்பு நிறத் துவிச்சக்கர வண்டி, பெண்களுக்கான கருப்பு நிறுத துவிச்சக்கர வண்டியொன்றும் இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த சான்றுப் பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் அலுவலக நேரத்தில் உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து அடையாளம் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளி குறைவடைந்ததால் பிள்ளையை கட்டி வைத்து அடித்த தந்தை!
கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
மீண்டும் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்!
|
|
|


