யாழ்.நகர் மத்தியில் வெடிக்காத நிலையில் எறிகணை மீட்பு!

யாழ்.மாநகர சபையினால் யாழ்.நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் துப்பரவு செய்யும் பணியின் போது வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் ஸ்ரான்லி வீதி பகுதியூடாக செல்லும் வெள்ள வாய்க்கால் கடந்த சில கிழமைகளாக யாழ்.மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளினால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றையதினம் (காலை வழமை போன்று அவர்கள் துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்ட போதே வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றினை கண்ணுற்றுள்ளனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிசார் எறிகணையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதவேளை குறித்த வாய்க்கால் துப்பரவு பணிகளின் போது கடந்த தினங்களில் கொடிய விஷ பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பலவும் காணப்பட்டன.
இந்நிலையில் பல வித சிரமங்கள் கஷ்டங்களுக்கு மத்தியிலையே துப்பரவு பணிகளை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகள் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|