யாழ். நகரில் நடைபாதைகளின் முன்பாகப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
Sunday, July 31st, 2016
யாழ். நகரில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகச் செல்லும் நடைபாதைகளின் முன்பாகப் பொருட்களை அடுக்கி வைத்திருப்பதனால் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் நடைபாதைகளில் பொருட்களைப் பரவி விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதைகளில் பொருட்களை வைக்க வேண்டாம் எனப் பல தடவைகள் கேட்டும் தொடர்ந்தும் பொருட்கள் பரவி வைக்கப்படுகின்றன. சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலையும் மீறிப் பொருட்களைப் பரவி வைத்திருப்போருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Related posts:
முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது - தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
இன்றுமுதல் ஜூன் 01 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: பிரகடனம் - இம்மாதம் மாத்திரம் 9 பேர் மரணம்!
|
|
|


