யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில்  பழைய மாணவர் சங்கம் உதயம்

Tuesday, March 29th, 2016

பெரும் திரளான பழைய மாணவர்களின் பங்களிப்புடன் கடந்த ஞாயிரன்று (27) யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர்  சு. முகுந்தன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.  தொழில்நுட்பவியல் கல்லூரிப்  பணிப்பாளர்,  மேலதிகப்  பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் உரைகளைத் தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது  சி.சிவஜன் தலைவராகவும், பி.பிரணவன் செயலாளராகவும்,  இ.குகன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன் 15 பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களும்  தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தலைவர்  சி.சிவஜன் தமது தலைமையுரையில் தாம் கல்லூரியின் நிலைப்பாட்டை நன்கு உணர்வதாகவும், கல்லூரியின் வளர்ச்சிக்காகத்  தம்மாலான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

Related posts: