யாழ். தையிட்டி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
 Friday, May 26th, 2017
        
                    Friday, May 26th, 2017
            யாழ். தையிட்டி கிழக்கு அரசடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் கிணறொன்றிலிருந்து 61 பெட்டிகளிலிருந்து 203 கைக்குண்டுகள் நேற்று வியாழக்கிழமை(25) மீட்கப்பட்டுள்ளதாகக் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கபட்டிருந்த தையிட்டிப் பகுதியில் வீட்டின் உரிமையாளர் கிணற்றினைத் துப்பரவாக்கி இறைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சீல் செய்யப்பட்டிருந்த நிலையில் பாரியளவு வெடிபொருள் பெட்டிகள் தென்பட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக ஹலோரஸ்ட் பணியாளர்கள் வெடிபொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவற்றை அகற்றுவதில் காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் சொன்ட் தன்னார்வ தொண்டர்களினால் காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் துணையுடன் வெடி பொருட்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        