யாழ். திருநெல்வேலியில் திடீரெனத் தீப்பற்றிய முச்சக்கரவண்டி தீயில் நாசம்!

Sunday, July 9th, 2017

யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் ஞான வைரவர் ஆலயத்திற்கருகில் இயங்கி வரும் கராஜ் ஒன்றில் திடீரென முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றிய நிலையில் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் சனிக்கிழமை(08) பிற்பகல்- 12.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த கராஜ்ஜின் தொழிலாளர்கள் முச்சக்கர வண்டியொன்றைத் திருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கரவண்டித் தாங்கிக்குள்  பெற்றோல் நிரம்பிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  பெற்றோல் கசிந்த நிலையில் திடீரெனக் குறித்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்துள்ளது.
நிலைமையை உணர்ந்து சுதாகரித்துக் கொண்ட தொழிலாளர்கள் எரிந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியைத் தூக்கி வந்து கராஜ்ஜிற்கு வெளியே வீசியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், பல இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த முச்சக்கர வண்டி முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

Related posts:

ரயிலில் பயணிக்க யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை - யாழ்.தொடருந்து நிலையம் தெரிவிப்பு!
ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர்...
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ந...