யாழ். சிறையில் கைதிகள் சிலர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!
Wednesday, July 20th, 2016
யாழ்.சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 18 கைதிகள் நேற்று முன்தினம் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு பிணை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமையினால் தங்களுக்கு இது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்?
ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜ...
டெங்கு - கொரோனா நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானவை - மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய டெங்க...
|
|
|


