யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் விபத்து: இரண்டு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயம் !

யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(11) முற்பகல்-11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த மூவரும் கைதடி நோக்கி சிறியரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கோப்பாய் மதவடி வீதியை அண்மித்த வேளை பின்புறமாக வந்த படிரக வாகனம் இவர்களை மோதித் தள்ளி விட்டுச் சென்றுள்ளது . சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கி ளில் பயணித்த 25 வயதுப் பெண், மற்றும் அவரது இரண்டு வயதுக் குழந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts:
லசந்தவின் சாரதி கொலையாளியை அடையாளங்காட்டினார்!
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்...
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...
|
|
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும...
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை - பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலமும் நிறைவேற்ற...