யாழ் குடா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு – எரிபொருளுக்கு அலைமோதிய மக்கள்

Tuesday, April 26th, 2016

யாழ்.குடாநாட்டில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அலை மோதுகின்றனர்.

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாக போவதாக மக்கள் மததியில் செய்திகள் பரவிவருவதால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பதுக்கப்படுவதுடன் எரிபொருள் கையிருப்பில் இல்லை என மக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரி பொருள் நிரப்பப்படுவதால் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Related posts:


இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுதினம் – அமைதிக் காலத்தில் சட்டவிரோத செயல் ம...
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !