குடாநாட்டில் ஒன்றரை இலட்சம் பனம் விதைகள்  நாட்டும் திட்டம்!

Wednesday, October 19th, 2016

யாழ்.குடாநாட்டில் இம்முறையான ஒன்றரை இலட்சம் வரையிலான பனம் விதைகள் பிரதேச செயலகங்கள் ஊடாக நடுகை செய்யப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை யாழ்.பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாக நடுகை செய்யப்படும் பனம் விதைகளுக்கான நிதி உதவிகளை பனை அபிவிருத்திச் சபை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் தமது பகுதியில் உள்ள பொது அமைப்புகள், நிறுவனங்கள் ஊடாக இந்தப் பனம் விதைகளை நடுகை செய்யவும் தீர்மானித்துள்ளனர். குடாநாட்டில் பனம் விதைகளை நடுகை செய்து அவற்றை பராமரிக்க வேண்டும் என்பதில் யாழ்.செயலகம் முனைப்பாகவுள்ளது.

இந்த நிலையில் இம்முறை குறைந்தது ஒன்றரை இலட்சம் வரையிலான பனம் விதை நடுகை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களிலும் இந்தப் பனம் விதைகள் நடுகை செய்யப்படும். இதே சமயம் பனை அபிவிருத்திச் சபை குறிப்பிட்ட இடங்களில் பரீட்சார்த்த பனம் விதை நடுகை திட்டம் ஒன்றை மேற்கொண்டு நடுகை செய்யவுள்ளது.

palm60022

Related posts: