யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு : கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு ! 

Friday, August 26th, 2016

யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  கடலில் கடலுணவுகளின் பிடிபாடுகள் மிகவும் குறைந்துள்ளதே இதற்கான காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய காலநிலை வேறுபாடு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி என்பனவே மீன்களின் பிடிபாடு குறைவதற்குக் காரணமெனவும்  மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடல் உணவுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பெரிதும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: