யாழ்ப்பாண மாவட்டத்தில் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

Tuesday, September 25th, 2018

யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியக் களைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயத் திணைக்களத்தால் இந்த நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி உரும்பிராய், புத்தூர், தெல்லிப்பழை ஆகிய பிரிவுகளில் பார்தீனியக் களைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்தப் பிரதேசத்தில் 163 குடியிருப்புகளின் சுற்றாடல்களில் பார்த்தீனியக் களைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை அழிக்குமாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதிகளும் தற்போது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

அதேநேரம் தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 87 குடியிருப்புக்களில் பார்த்தீனியக் களைகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனால் தமது சூழலில் பார்த்தீனியத்தை அனுமதித்தோருக்கு எதிராகத் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தால் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர், தென்மராட்சிப் பகுதிகளில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts: