யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு நான்காவது தடவையாகத் தேசிய விருது!

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்குத் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நான்காவது தடவையாகத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் இதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் கடந்த-2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் பொது நூலகங்களிடையே நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அடிப்படையில் யாழ். மாநகர சபைக்குட்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம்!
கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு - மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் - தபால் மா அதிபர்...
சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் - சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க த...
|
|