யாழ்ப்பாணம் நகரில் தீ – மூன்று கடைகள் பாதிப்பு!
Thursday, December 28th, 2023
யாழ்ப்பாணம் நகரில் கட்டிடம் ஒன்றில் உள்ள மூன்று கடைகளில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ காரணமாக ஆடை விற்பனை நிலையம், பாடசாலை புத்தக பொதிகளை விற்பனை கடை என்பன முற்றாக அழித்துள்ளன. மேலும் அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் தீயால் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீக்காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. மின்சார சபை கட்டிடத்திற்கான மின் விநியோகத்தை தற்காலிகமாக துண்டித்துள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மலையகத்தில் பரிசோதனை
யாழ். மாநகரப் பகுதியில் டெங்கு தாக்கம் குறைவு!
யாழ் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!
|
|
|


