யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  திருட்டு !

Thursday, August 4th, 2016

யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மற்றும் கோழிக் கூட்டில் நின்ற கோழிகள் என்பன நேற்று கடந்த திங்கட்கிழமை(01) மதியம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே தடவையில் இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: