யாழ்ப்பாணத்தில் 85 ஹெக்ரேயரில் இம்முறை உருளைக்கிழங்குச் செய்கை!

யாழ்.குடாநாட்டில் இந்தமுறை 85 ஹெக்ரேயர் நிலபரப்பில் உருளைக்கிழங்கு செய்கையில் விவசாயிகள் ஈடுபடவுள்ளனர். உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த போகத்தைப் போன்று இந்த முறையும் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கை மானிய விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு விவசாயத்திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மாகாணப்பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
இந்த விதை உருளைக்கிழங்கு பெறப்பட்டுப் பின்னர் யாழ்.மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் செய்கையாளருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உருளைக்கிழங்கை விநியோகிப்பதற்குச் செய்கையாளர்களின் விவரங்களைத் திணைக்களம் திரட்டியுள்ளத. இந்தக் கலபோக உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபட ஆர்வம் காட்டும் விவசாயிகள் தமது விவரங்களைச் சமர்பிக்க முடியும்.விதை கிழங்கு முன்னுரிமை அடிப்படையில் மானிய விலைக்கு வழங்கப்படும் – என்றார்.
Related posts:
|
|