யாழ்ப்பாணத்தில் 8வது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
Saturday, January 28th, 2017
வடக்கின் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300ற்கு மேற்பட்ட முதலிட்டாளர்களின் பங்களிப்புடன் எட்டாவது ஆண்டாக யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது. இந்த கண்காட்சி நேற்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறும்
சர்வதேச கண்காட்சி கூடம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம், யாழ் மாநகர சபை, யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றம் யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

Related posts:
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி - சுகாதார அமைச்சு!
மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு - சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப...
யுக்ரைன் விவகாரம் - பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுங்கள் - சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பி...
|
|
|


