யுக்ரைன் விவகாரம் – பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுங்கள் – சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை!

Saturday, February 26th, 2022

யுக்ரைனில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம் எனவும் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள யுக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஆர்.ஹசன் தெரிவித்தார்.

யுக்ரைனில் தற்போது 59 இலங்கையர்கள் உள்ளனர்.அவர்களில் 20 பேர் யுக்ரைன் தலைநகர் கியுவ்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: