யாழ்ப்பாணத்தில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்!
Saturday, November 12th, 2016
இனங்களிற்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவோம் எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைவாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் கை கோர்ப்பு என்ற நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மற்றும் தெற்கிற்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உதவிச்செயலாளரான W.V.P.அனுர தலைமையில் மாத்தறை மாவட்டத்தைச்சேர்ந்த அரச அலுவலகர்கள் நாற்பது பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த இவர்கள் யாழ் அரசாங்க அதிபர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டனர்.

Related posts:
கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத இறைச்சி விற்பனை அதிகரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு !
இலங்கை துறைமுகத்தில் வெளிநாட்டு கடற்படைக் கப்பல்!
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை...
|
|
|


