யாழில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளது!

யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் டெங்கு நோய் தாக்கம் சென்ற ஆண்டைக்காட்டிலும் குறைவடைந்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய சுழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது
யாழ்ப்பாணத்தில் சென்ற வருடம் டெங்கு நோயின் தாக்கத்தின் காரணமாக 165 பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். எனினும் இவ்வருடம் 58 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கிடைத்துள்ளன. இவ்வகையில் சென்ற வருடத்தைக் காட்டிலும் இவ்வருடம் டெங்கு தாக்கம் குறைவடைந்துள்ளது.
இதேவேளை நவம்பர்இ டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணம் நல்லுர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 வீடுகள் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டு அதற்கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த மாதத்தில் மாத்திரம் 85 வழக்குகள் பதிவு செய்துள்ளோம் இவ்வாறான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தில் டெங்கு தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம். எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|