யாழில் கூரிய வாளுடன பயணித்த இரு இளைஞர்கள் கைது

Tuesday, November 21st, 2017

யாழ். இராசபாதை வீதியில் முச்சக்கரவண்டியொன்றில் கூரிய வாளுடன் பயணித்த இரு இளைஞர்கள் விசேட அதிரடிப் படையினரால்  திங்கட்கிழமை(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுகளுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.அத்துடன் இரு சந்தேகநபர்களும் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் கூரிய வாள் என்பனவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.

Related posts:

நாட்டில் அமைதி, நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை நோக்கிப் பாதயாத்திரை!
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...