மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இறுதியாக திருத்தம் செய்யப்பட்டு 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான திருத்தங்கள் இடம்பெறவுள்ளதோடு இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சாரதி அனுமதிப்பத்திர திணைக்கள ஆணையாளர் வசந்த என். ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இப்பொழுது புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு.1, 700 மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காததற்கு ஆண்டுக்கு 250 அபராதம் மட்டுமே அறவிடப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளர்.
000
Related posts:
தரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்!
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் - அமைச்சர் ஜோ...
அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
|
|