மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்படலாம்!

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வரி முறைமையினால், மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு வீதம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லையென மோட்டர் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் இதுவரையில், பழைய விலையிலேயே இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய வரி முறைமை எதிர்வரும் 2017 ஜனவரி 01 ஆம் திகதி முதல், அல்லது 2017 ஏப்ரல் 01 திகதி முதல் மோட்டார் சைக்கிள்களின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும் எனவும் விற்பனை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
வலயக் கல்வி அலுவலகம் மூலம் தேர்தல் கொடுப்பனவை வழங்க பணிப்பு!
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம...
பதவி விலக மாட்டேன் - அடம்பிடிக்கும் சம்பந்தன் – தலைமை பதவியால் கூட்டமைப்புக்குள் வெடித்தது பூகம்பம்!
|
|