மேலும் ஒரு தொகுதி இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர்!

Saturday, December 30th, 2017

எதிர்வரும் தினங்களில் இலங்கையில் தடுப்பில் உள்ள 70 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வருடம் 150க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுவரையில் அவர்களுள் 89 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 70 பேரும் எதிர்வரும் தினங்களில் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: