மென்பானங்களின் சீனி அளவுக்குறியீடு அவசியம் – சுகாதார அமைச்சு
Sunday, June 26th, 2016
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பானங்களிலும் அதன் சீனிக்கொள்ளவு பிரசித்தப்பட வேண்டும்.
இந்த சீனிக்கொள்ளவு, வர்ணக்குறியீடுகளால் பிரசித்தப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோய்களுக்கு மென்பானங்களும் காரணமாக உள்ளன என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Related posts:
வவுனியா பேருந்துக்கு கல்வீச்சு: 4 பேர் கைது!
திடீரென இலங்கை வந்துள்ளது பேஸ்புக் குழு!
கடும் மழை: 8257 குடும்பங்கள் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்!
|
|
|


