திடீரென இலங்கை வந்துள்ளது பேஸ்புக் குழு!

Friday, May 11th, 2018

பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றசாட்டு தொடர்பில்விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு  இலங்கை வந்துள்ளது.

இந்தியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலக பிரதிநிதிகளே இவ்வாறு வருகைதந்துள்ளனர். இவர்கள் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் குழந்தைகள், பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்துள்ளனர். அத்துடன் நாட்டில் தொழில் முனைவோர்களுக்காக விசேடகருத்தரங்கு ஒன்றையும் நடத்தவுள்ளனர்.

Related posts:

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை - நிர்ணயவிலையில் வ...
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்...