மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
Friday, April 30th, 2021
மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மாத்தளை, குருணாகல் , மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை – தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் – பன்னல காவல்துறை அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
மொனராகலை – சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!
போர்க் குற்றச்சாட்டு குறித்த புள்ளி விபரங்கள் உண்மையானதல்ல!
இந்தியாவிலிருந்து 20 இலட்சம் முட்டைகளுடன் இலங்கை வரும் விசேட கப்பல்!
|
|
|


