மூடப்படும் மிஹின்லங்கா?
Sunday, June 12th, 2016
இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிறுவனம் மூடப்படுவதால் வேலையிழக்கும் 330 பேரின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
அனுமதிப் பத்திரமில்லாத பேருந்து சாரதிகளுக்கு 200,000 ரூபா வரை அபராதம் !
புத்தாண்டுப் பரிசாக மாணவர்களுக்கு மருத்துவக் காப்புறுதி!
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் கா...
|
|
|


