முறைப்பாடு கிடைப்பின் கைதுசெய்ய அரசாங்கம் தயங்காது!

கிறிஸ்தவ மதத்தலங்களும் தாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக எவராவது முறைப்பாடு தெரிவிக்கும் பட்சத்தில் அவரை கைது செய்யவும் அரசாங்கம் தயங்காது எனவும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்தரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இனவாதம் நாட்டில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எமது நாட்டின் வரலாற்றை நோக்கும்போது தெளிவாகப் புரியும். அது மட்டுமல்லாமல் கடந்த 30 வருடகாலமாக ஏற்பட்ட யுத்தமும் இனவாத ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வியலில் பாரிய பாதிப்பு ஏற்பட்டதுடன் நாட்டின் அபிவிருத்தியிலும், பொருளாதாரத்திலும் நாம் பாரியதொரு பின்னடைவை எதிர்நோக்க வழிவகுத்தது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் 160 கிறிஸ்தவ மதத்தலங்கள் தாக்கப் பட்டுள்ளதாக அன்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன. இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
Related posts:
|
|