முறிகள் விநியோகம் தொடர்பான மத்திய வங்கி விசாரணை அறிக்கையை வெளியிடாமல் உள்ளதாக விமல் குற்றச்சாட்டு!

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில், இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 5.2 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முறிகள் கொடுக்கல் வாங்கலை மூடி மறைப்பதற்கு அரசாங்கத்தின் சில தரப்பினர் முயற்சித்து வருவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
Related posts:
ஜனாதிபதியை நேரில் சந்திக்க விரும்பும் வரலாற்றுச் சிறுவன்!
முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுற அனுமதிக்கும் அதி...
|
|