முரளிப் பழத்தைக் கண்டு அஞ்சும் வன்னி மக்கள்!

Tuesday, December 13th, 2016

 

32ஆண்டுகளின் பின்னர் வன்னியில் முரளிப் பழம் பழுத்ததால் மீண்டும் வறுமை வந்நுவிடுமோ என்று நெடுங்கேணி ஒலுமடுக் கிராம மக்கள் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணி ஒலுமடுக் கிராமத்தில் முரளி மரம் பழுத்துள்ளது. இந்தப்பழம் பழுத்தால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தைப் பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர். 1984ஆம் ஆண்டு இந்த முரளிப்பழம் பழுத்தது, அதன்பின்னர் அக்காலப் பகுதியில் பெரும் வரட்சி ஏற்பட்டது. மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் 32 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு சம்பவம் இப்போது இடம்பெற்றுள்ளது.

அதிக பழங்கள் பழுத்துள்ளன. இதனால் மீண்டும் வரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என நெடுங்கேணி ஒலுமடுக் கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதி மக்களில் ஒரு பகுதியினர் அச்சம் வெளியிட்டுள்ளவேளை மற்றொரு பகுதியினர் பழங்களைப் பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர். சிலர் பழங்களைப் பிடுங்குவதங்காக மரம் அறுக்கும் கருவியைப் பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதால் அவ்விடத்துக்குப் பொலிஸார் சென்று மரத்தை அறுக்கத் தடை விதித்துள்ளனர். ஒரு கிலோகிராம் பழம் 160ரூபா தொடக்கம் 200 ரூபா வரை தற்போது விற்பனை; செய்யப்படுகின்றது. மேலும் காஞ்சிரமோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு தண்ணி முறிப்பு பகுதிகளிலும் முரளிப்பழம் பழுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1-42

Related posts: