மும்மொழிக் கற்கை நிலையத்தின் சிங்கள, தமிழ் ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
Tuesday, July 4th, 2017
வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கிவரும் மும்மொழிக் கற்கை நிலையத்தினால் 2017, 2018 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கான சிங்கள, தமிழ், ஆங்கிலக் கற்கை நெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.
இந்தக் கற்கை நெறியில் இணைய விரும்புவோர் யாழ். கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தில் அல்லது WWW.edumin.np.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாகவோ பெற்றுப் பூரணப்படுத்தி எதிர்வரும்- 20 ஆம் திகதிக்கு முன்னதாக “மும்மொழிக் கற்கைகள் நிலையம்”, இராமநாதன் வீதி, கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை, கலட்டி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியுமென வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
யுவதியை ஏமாற்றிய இளைஞன் மீது தாக்குதல் : புத்தூரில் சம்பவம்!
எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஜனாதிபதி விசேட...
|
|
|


