முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் செயற்திட்ட செயலமர்வு!

Wednesday, November 23rd, 2016

கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியங்கள் அவசியமானது. சிறந்த போசாக்குள்ள பிள்ளைகள் சரியான முறையில் கல்வியில் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். அந்த வகையில் போசாக்கு என்பது பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

தேசிய ரீதியாக ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்துறை சார் போசாக்கு செயல்திட்டத்தின் கீழ் மாவட்ட ரீதியில் போசாக்கு மற்றும் வலுவூட்டல் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் செயற்திட்ட செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(22) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபற்றிய ஒரு நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கூறினார். தெடர்ந்து அவர் உரையாற்றுகையில்

கல்வியில் பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கு முன்னர் அவர்கள் கல்வி கற்பதற்கான தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்பது அவசியமாகும். கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியங்கள் முக்கியமானவை. போசாக்கு சரியான முறையில் இருக்கின்ற போதுதான் பிள்ளைகள் சரியான முறையில் கல்வியில் ஈடுபாட்டுடன் செயற்பட முடியும். போசாக்கு பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் மிக்கதாகும் என்று தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மேம்போக்கான சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த் செயற்திட்டம் நாட்டின் எதிர்கால சந்ததிகள் சிறப்பான போசாக்குடையவர்களாகவும், அறிவு திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்ப்பாடசாலை ஆசிரியர்களே எதிர்கால சந்ததியினரான குழந்தைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்டவர்கள். அவர்களுடைய பெற்றோர்களாக செயற்படுகின்றனர். அவர்களுக்கு போசாக்கு தொடர்பான அறிவூட்டல்களை மிகச்சிறந்த முறையில் மேற்கொள்வதன் மூலம் இந்த இலக்கை இடையமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால சமூகத்தினை ஆரோக்கியமானதாக உருவாக்கும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் செயற்படும் போது சிறப்பானதொரு மாற்றம் கிடைக்கும். எனவே சரியாக கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சமூகத்திற்கான செயற்பாடுகளே முக்கியமாகும் என்று மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்பிள்ளைப் பருவ சிறார்களின் போசாக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளும், முன்பிள்ளைப்பருவ சிறார்களின் முன்னேற்றம், வளர்ச்சி தொடர்பான மீளாய்வு, முன்பிள்ளைப் பருவ சிறார்களின் போசாக்கினை மேம்படுத்துவதில் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு, முன்பள்ளியில் வீட்டுத் தோட்டம் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த செயலமர்வில் ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன், வளவாளர்களாகப் பங்கு கொண்ட கிரான் பொதுச் சுகாதார தாதிய சகோதரி திருமதி ரி.பத்மநாதன் வாகரை பொதுச் சுகாதார தாதிய சகோதரி திருமதி எம்.சிறிதரதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

13064b7566d40588afc57b989f405dbb_XL

Related posts: