முதல் நியமனம் பெறும் பாடசாலையில் 5 வருடங்கள் சேவையாற்ற வேண்டும்!

Saturday, March 11th, 2017

புதிதாக ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தமது நியமனக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலையில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் சேவையாற்ற வேண்டியது கட்டாயமாகும் என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய மாகாணத்தின் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுத்தியுள்ளார்

மேலும் அவர்களுக்கு எக் காரணம் கொண்டும் வேறு பாடசாலைகளுக்கு விடுவிக்க வேண்டாமெனவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாணத்தின் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுத்தியுள்ளார்.

அவ்வாறு புதிய நியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கையில் அதே பாடத்திற்கு மற்றொருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அல்லது மேலதிகமான ஆசிரியர்கள் பாடசாலையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அது பற்றி உரிய வலயக் கல்விக் காரியாலத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

5 வருடத்தை பூர்த்தி செய்யாத ஆசிரியர்களை மற்றும் பாடசாலையில் மேலதிகம் என்ற காரணங்களுக்காக எந்தவொரு ஆசிரியரையும் மாகாணத்திற்கு வெளியே அல்லது தேசிய பாடசாலைக்கு விடுக்க வேண்மாமென சகல மாகாண பாடசாலைகளின் அதிபர்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: