நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் – நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Monday, February 21st, 2022

நாடளாவிய ரீதியில் 9000 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த:

மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அதற்கான  போட்டிப் பரீட்சைக்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிராமசேவகர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில் 2,3 கிராம சேவகர் பிரிவுகளை ஒருவரே நிர்வகிக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் திணைக்களம் கடந்த சில மாதங்களாக பெரும் வேலைப்பளுவுடன் காணப்படுகின்ற நிலையில் மேற்படி திறந்த போட்டிப் பரீட்சைக்கான திகதி ஒன்றை நிர்ணயித்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. விரைவில் அதற்கான தகுதியை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும்அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: