முச்சக்கர வண்டி விபத்து:ஒருவர் படுகாயம்!
Saturday, September 24th, 2016
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஏ-35 வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப் ரகவாகனம் மோதியதில், முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை (24) மதியம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பகுதியலிருந்து பரந்தன் நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப்ரக வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புபட்ட வாகனம் தப்பிச் சென்றுள்ளது. மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts:
சிறப்பு கல்வித் தேவை பற்றி ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை!
உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடையும் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் - அனைத்து உள்ளூராட்சி மன்றங...
|
|
|


