பெற்றோரின் கவனவீர்ப்பை அடுத்து அதிபருடன் முரண்பட்ட ஆசிரியருக்கு இடமாற்றம்!

Monday, October 17th, 2016

மூளாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரால் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அந்தப் பாடசாலையின் மாணவர்களுடைய பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டத்தை அடுத்து அந்த ஆசிரியர் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டார். பாடசாலை மாணவர்களுடைய கல்வி செயற்பாட்டுக்குத் தடையாக உள்ள ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்த கடந்த வியாழக்கிழமை மாணவர்களை பாடசாலைக்கு செல்லவிடாது தடுத்து மூளாய் அமெரிக்கன் மிசன் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர் கவனவீர்ப்ப போராட்டத்தை மேற்கொண்டனர். பாடசாலைக்குள் அத்தமீறும் ஒருவர் பாடசாலையின் அதிபருடன் நாளாந்தம் சண்டையிடுவதாகவும் தெரிவித்த பெற்றோர், அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.

பெற்றோரின் கவனவீர்ப்பு போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் சங்கானைக் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே அந்த பாடசாலைக்கு இடையூராக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் இடமாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆசிரியர் ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டார். அதேவேளை பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும் பாடசாலைக்க தேவையாக உள்ள ஆசிரியர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்தது. பாடசாலை பின்புறமாக உள்ள பாடசாலை முதல்வர் அலுவலகத்தை பாடசாலையின் முன்பாக மாற்றுவதற்கான நடவடிக்கையையும் வலயம் மேற்கொண்டுள்ளது” – என்றார்.

transfer-720x480

Related posts: