முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு!

Saturday, November 5th, 2016

நோர்வேயிலிருந்து  இலங்கை வந்த மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில்  தொலைத்த பயணப்பையை  முச்சக்கர வண்டி சராதி தேடிப்போய் வழங்கிய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ்க்கு நோர்வே தூதரகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ் சோலன்டட் என்ற உலகின் பழமை வாய்ந்த கப்பலில் கடந்த சனிக்கிழமை  இலங்கைக்கு வந்த பெண்ணொருவர்  முச்சக்கர வண்டியொன்றில் தனது பயணப்பையை விட்டுச்சென்றுள்ளார்.குறித்த பையினை துறைமுக அதிகாரசபை மற்றும்  கப்பல் துறை முகவர்கள் இணைந்து தேடியும் குறித்த பை கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த கப்பல் அடுத்தநாள் காலை  மாலைத்தீவு செல்ல வேண்டிய கட்டயாம் காணப்பட்டதால், தனது பையை தொலைத்தவாறு குறித்த நோர்வே மாணவி மாலைத்தீவு சென்றுவிட்டார்.எனினும் முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ் தனது முயற்சியினை விடாது ஹோட்டல்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சாரதிகளிடம் குறித்த நோர்வே பெண் குறித்து விசாரித்துள்ளார்.

ஒருவாறு நோர்வே தூதரகத்துக்கு குறித்த விடயத்தை தெரிவித்த சாரதி, பையை தூதரகத்தில்  கையளித்துள்ளார்.இந்நிலையில் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் பை கிடைத்ததற்கு அடுத்தநாள் மாலைத்தீவு செல்லவிருந்த நிலையில், குறித்த ஊழியரிடம் பை கொடுக்கப்பட்டதுடன், அது  மாலைத்தீவில் வைத்து பை நோர்வே பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி சாரதியான  பிரான்ஸிஸ் தனக்கு கிடைத்த பெறுமதியான பையை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உரிய பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் நேர்மையான குணம் நம் எல்லோருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

14971998_10206030633879628_314577105_n__1_

Related posts: