முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுகாயம்
Friday, March 18th, 2016
அக்கரபத்தனை பொலிஸ் பகுதியில் பசுமலை நகரத்திலிருந்து அக்கரபத்தனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று உருலேக்கர் தோட்டப்பகுதியில் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
முச்சக்கவண்டியில் பயணித்த மூவர் காயங்களுடன் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(17) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சககரவண்டியில் சென்ற 2 வயது குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!
இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெ...
சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது - தேர...
|
|
|


