முச்சக்கரவண்டி கோரவிபத்து – ஒருவர் பலி!

Thursday, July 15th, 2021

பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் அதிகாலை குருநாகலில் இருந்த யாழ்ப்பாணம் வந்த முச்சக்கரவண்டி பளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் மீது மோதியது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர்படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவரச சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: