முகாமையாளர் மீது வாள் வெட்டு: தொலைபேசி மற்றும் பணம் பறிப்பு !

சங்கனை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவச் சங்க மூளாய் கிளை முகாமையாளர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன் தினம் இரவு 8.15 மணியளவில் குறித்த முகாமையாளர் தனது மோட்டர் சைக்கிளில் வீட்டை நோக்கி பயனமாகத் தயாரானார்.
இதன் போது அப்பகுதிக்கு திடீரென வந்த நாரொருவர் முகாமையாளரிடமிருந்து பணப்பையை பறிக்க முயற்சித்த்துள்ளார். இருப்பினும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. உடனே முகாமையாளரின் சட்டைப்பையில் இருந்த கையடக்கத் தொலைபேசியையும் 5 ஆயிரம் ரூபா பணத்;தையும் பறித்துக் கொண்டு ஓடினார்.
இந்த நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் யார் என்பதை அறிந்த முகாமையாளர் தனது உதவியாளரை அழைத்தார். இந்த நிலையில் தப்பியோடிய கொள்ளையன் வாள் கொண்டு வந்து முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் படு காயமடைந்த முகாமையாளரான கே.மதியழகன் (வயது -45) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று முறையிட்டுள்ளார்
பின்னர் பொலிஸாரின் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்
Related posts:
|
|