முகாமைத்துவமானி தெரிவுப் பரீட்சை இம்மாதம் 12இல் நடைபெறும்!

பல்கலைக்கழகத்தில் புதிதாக விண்ணப்பித்த வெளிவாரி மாணவர்களுக்கான வியாபார முகாமைத்துவமாணி தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பணிப்பாளர் நிமலதாசன்அறிவித்துள்ளார்.
காலை 9.30 மணி தொடக்கம் மு.ப 11.30மணி வரை பல்கலைகழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 8அம் திகதி புதன்கிழமை காலை 9மணி முதல் மாலை 2.30 மணிவரை மேற்படி நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெருமை தேடித்தந்த மாணவனுக்கு கௌரவிப்பு!
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் - சமூக ஆர்வர்கள் கோரிக்கை!
|
|