மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
 Tuesday, November 15th, 2016
        
                    Tuesday, November 15th, 2016
            
இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள 4 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எல்எம் றியால் இவர்களது விளக்கமறியலை எதிர்வரும் 28ம் திகதி வரை நீடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களான இவர்கள் கடந்த 1ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
20 ஆவது திருத்த விவகாரம்:  அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரோஹித அப...
வல்லையில் கடல் நீரேரிக்குள் பாய்ந்து கப் ரக வாகனம் விபத்து!
அனுமதிக்கு அதிகமானோர் திருமண நிகழ்வில் – குருநகரில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        