மீனவருக்கு 5ஆயிரம் அபராதம்!
Wednesday, November 23rd, 2016
தடைச் செய்யப்பட்ட கூட்டுவலை பாவித்து மீன்பிடித்த செம்மலைகப் பகுதியைச் சேர்ந்த மீனவருக்கு 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த அபராதம் விதித்துத் தீர்பளித்தார் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட வலையை அழிக்குமாறு நீதிவான் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்குப பணித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாயாறு கடல் நீரேரியில் தடைச் செய்யப்பட்ட கூட்டுவலை பாவித்து மீன்பிடித்த மீனவரை கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகள் கைது செய்திருந்தனர். பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அந்த மீனவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் நேற்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிவான் இவ்வாறு அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts:
சிவனொளிபாத மலைக்கு சிறப்பு புகையிரத சேவை!
கீரைப் பயிர்ச் செய்கையில் வலி.கிழக்கு விவசாயிகள்
தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு - கல்வி அமைச்சு - மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடைய...
|
|
|


