மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள் இறுதியாகும் என எதிர்பார்ப்பு!
Saturday, February 12th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்து வரும் சில தினங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லிக்குச் செல்லவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இவரது இந்த விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை கூட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு ஒழிப்புவார செயற்றிட்டங்களுக்கு மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...
பருத்தித்துறையில் 48 பேர் உட்பட வடக்கில் 69 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !
|
|
|


