மின்வெட்டுதொடர்பான நேர அட்டவணை வெளியானது !

இலங்கையில் 3 1/2 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் பல பிரதேசங்களில் இன்று முதல் இந்த மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாகவும் மிசாரசபை மேலும் தெரிவித்துள்ளது..
இதன்படி காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் மின்சார தடைப்படும். அதற்கமைய காலை 8 மணிமுதல் 10.30 வரைக்கும் இரவு வேளையில் 6 மணிமுதல் 10 மணிக்குள் ஒருமணித்தியாலமும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
உரிய மழைவீழ்ச்சி இன்மையாலும், நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை ஆகியவையே இதற்கான காரணங்கள் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் விசேட கூட்டம்!
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுங்கள் –துறைசார் தரப்...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது - இராணுவத் தளபதி அ...
|
|