மாலை வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை பேருந்தில் ஏற்றுங்கள் – விசுவமடு பெற்றோர் கோரிக்கை!

Friday, November 25th, 2016

பரந்தன் – புதுக்குடியிருப்பு வழியாக முல்லைத்தீவுக்குப் பயணிக்கும் இ.போ.ச பேருந்துளில் மாலை நேரக் கல்வி நிலையத்துக்குச் செல்லும் மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைவேலி, வள்ளிபுனம், உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இருந்து 5ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள் விசுவமடுவுக்கு தனியார் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் வழமையாக இ.போ.ச பஸ்களில்தான் சென்று வருவார். கடந்த 10 நாட்களாக பஸ்கள் மாணவர்களை ஏற்றாத செல்கின்றன. 15 கிலோ மீற்றருக்கு மேல் சென்று கல்விகற்கும் மாணவர்களை ஏற்றாத செல்வதால் மாணவர்களும், பெற்றொரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காக இ.போ.ச ஊழியர்கள் ஒத்துழைப்ப வழங்கவேண்டும் – என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பெற்றோர் பஸ் செலவுக்கான போதிய பணத்தை மாணவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். புதுக்குடியிருப்பில் இருந்து விசவமடுக்கான பயணச் செலவு ரூ.20. மாணவர்களை 5ரூபாவுடன் ஏற்றும்போது நடத்துநர் தண்டனைக்குட்பட வேண்டியிருக்கும். பெற்றோர் இதில் கூடிய கவனம் எடுக்கவேண்டும். இனி அந்தப் பகுதியால் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸின் நடத்துநர், ஒட்டுநருக்கு மாணவர்களை ஏற்றிச்செல்வுமாறு கூறுகின்றேன் – என்று இ.போ.ச முல்லைத்தீவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

1476633460_download

Related posts: