மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக்குவதற்கு எதிர்ப்பு!

Monday, July 25th, 2016

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை பகுதியளவு அரச நிறுவனமாக மாற்றுவதற்கு தனியார் பல்கலைக்கழக மத்திய நிலையம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

மாலபே வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அரச முடிவெடுத்துள்ளமைக்கு எதிராக 27ஆம் திகதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், குறித்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பெரும்பான்மையானோர் குறித்த கல்லூரியை முற்றாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இதற்காக மாணவர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசின் இந்த தீர்மானத்திற்கு எதிராக வைத்திய பீட மாணவர்கள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ககளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், இதன் முதலாவது ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலி நகரில் 29 ஆம் திகதியும், கண்டியில் 2ஆம் திகதியும், அநுராதபுரத்தில் 8ஆம் திகதியும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related posts: