உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே!

Saturday, August 5th, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டத்தினால் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதத்திலிருந்து 16 ஆக வீழ்ச்சியடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதிவாரி அடிப்படையில் 70 வீதமும், விருப்பத் தெரிவு முறையில் 30 வீதமும் காணப்பட்ட முறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக காணப்பட்டது.
எனினும், தற்பொழுது திருத்தி அமைக்கப்பட உள்ள சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 16 ஆக வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக அவர்  தெரிவித்துள்ளார். புதிய முறையினால் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: